நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் மோதல்: இருவர் உயிரிழப்பு

3 hours ago
Sri Lanka
(7 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்தினுள்ளேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்கான காரணம் மற்றும் மரணங்கள் சம்பவித்தமைக்கான பின்னணி சூழல் என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.