பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமனம்

2 hours ago
SPORTS
(2 views)
aivarree.com

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நடைபெறவிருக்கு டெஸ்ட் தொடர்களில், பாகிஸ்தான் அணி தெரிவானதையடுத்து அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளியியலில் அணியின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், ஷான் மசூதிற்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாபர் அசாமுக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்ற இடதுகை துடுப்பாட்ட வீரரான ஷான் மசூத், ஒரு கடினமான காலகட்டத்திற்குப் பிறகு பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடிய 16 போட்டிகளில் 12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக கடந்த மே மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் 2-0 என பாகிஸ்தான் வைட்வாஷ் செய்யப்பட்டதை அடுத்து, அவரது தலைமைத்துவம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

பாகிஸ்தான் அணி ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 6 வரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 13 வரை இங்கிலாந்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.