நீர்கொழும்பு சிறைச்சாலையில் பரபரப்பு: கூரை இடிந்து வீழ்ந்ததில் கைதிகள் நால்வருக்கு காயம்

2 months ago
Sri Lanka
(33 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் இன்று நண்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து, ஆண் கைதிகள் சிலர் சிறைச்சாலை கட்டடத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் கைதிகள் நின்றுகொண்டிருந்த கட்டடத்தின் கூரை ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்த நான்கு கைதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.