படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக உக்ரைன் மீது போலியான தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவது போன்ற காணொளிகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விடயத்தை ரஷ்யா மறுத்துள்ள அதேவேளை இது தொடர்பில் அமெரிக்கா எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது துருப்புக்களை குவித்துள்ள நிலையில் படையெடுப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.
