பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை வலுவிழந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகக் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாதுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆளுங் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சகல தொகுதி அமைப்பாளர்களும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
