தமிழ் MPகள் போராட்டத்தின் எதிரொலி| TNAவை அழைத்தார் ஜனாதிபதி

4 years ago
Sri Lanka
(150 views)
aivarree.com

தமிழ் MPகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் மகாவலி அபிவிருத்தியின் பேரில் இடம்பெறும் காணி சுவீகரிப்புகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

இது சர்வதேச அளவிலும், அரசாங்கத்துக்குள்ளும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.