தென் மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு

2 months ago
tamilnewsline.com

வலுவான காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக, காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை ஊடாகப் பரவும் கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி நாளை (04) இரவு 8.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை ஊடாகப் பரவும் கடற்பரப்புகளில் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, புத்தளம் முதல் காலி வரை கொழும்பு ஊடாகப் பரவும் கடற்பரப்புகளிலும் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.