800 திரைப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?| உண்மையை விளக்கினார் முரளிதரன்

5 years ago
tamilnewsline.com

இலங்கை முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியே அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து முத்தையா முரளிதரனை அய்வரி செய்தி குழு தொடர்பு கொண்டு வினவியது.

இந்த செய்தி போலியானது என்பதை உறுதிபடுத்திய முரளிதரன், வேறொருவர் இந்த படத்தில் நடிப்பதாகவும், விரைவில் விபரங்கள் வெளியாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.