உக்ரைன் / இலங்கைக்கு கடும் பாதிப்பு / ரணில் எச்சரிக்கை

5 years ago
tamilnewsline.com

ரஷ்யா – உக்ரைன் விவகாரம் காரணமாக இலங்கைக்கு கடும் பாதிப்புகள் ஏற்படவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.


இந்தநிலைமையினால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பீப்பாய்க்கு 115 டொலர் என்ற அடிப்படையில் அதிகரிக்கும்.


பழைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், அவற்றுக்கான கட்டணத்தை செலுத்தி நிறைவு செய்ய வேண்டும்.


அத்துடன் கட்டாரில் இருந்து பெருந்தொகையான எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், இலங்கைக்கு எரிவாயுவை பெறுவதில் பிரச்சினை ஏற்படும்.


இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் பசில் பாராளுமன்றிற்கு விளக்க வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கோரினார்.