ரணில் விக்ரமசிங்கவின் புதிய அறிக்கை / 6 முக்கிய விடயங்கள்

4 years ago
Sri Lanka
(65 views)
aivarree.com

முன்னாள் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான 6 விடயங்கள்.

  • டொலர் ஒன்றின் தற்போதைய பெறுமதி இலங்கை நாணயத்தில் 250 ரூபாவாகும்.
  • இப்படியே விட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் டொலர் ஒன்று 300 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
  • இந்த ஆண்டு 6 பில்லியன் டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ள போதும், அது குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவே இல்லை.
  • நாளாந்தம் புதுப்புது பிரச்சினைகள் எழுகின்றன – வங்கி முறைமை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை அடுத்தவாரம் கிடைத்ததும், அது பாராளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும்.
  • எதிர்கால பொருளாதாரம் தொடர்பில் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
  • IMF அறிக்கை தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து இணங்க வேண்டும்.