இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லான்சா புதன்கிழமை விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நிமல் லான்சாவை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம் அமைச்சின் பணிகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாகவும், இது குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளருடன் நிலவும் முரண்பாடே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
