கொழும்பு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கப் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்தார்.
இந்த வருடத்துக்குள் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒரே நேரத்தில் பகைத்துக் கொண்ட ஒரே நாடு என்ற சாதனையை இலங்கை படைக்க நேரும்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ள இலங்கையில் சீனாவிடம் இருந்து பாரிய முதலீடுகளை எதிர்பார்க்க முடியாது.
பாராளுமன்றின் ஊடாக இலங்கை விரைவில் பொருளாதார மீட்புக்கான பொறிமுறை ஒன்றைக் கொண்டுவர வேண்டும்.
ஓய்வூதியத்தைச் செலுத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை – சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் நாட வேண்டும்.
டொலர் விலை கூடினாலும், நிவாரணங்களை வழங்கினாலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
