நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு: மூன்று அதிகாரிகள் உட்பட நால்வர் பலி

12 hours ago
Sri Lanka
(7 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி என நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.