நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றம்: 650 கைதிகள் அவசரமாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!

4 hours ago
Sri Lanka
(5 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 650 கைதிகள் தும்பர, அனுராதபுரம் மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையினுள் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான வன்முறைச் சம்பவங்களை அடுத்தே, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான கைதிகள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடுமையான காவல்துறை பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.