ட்ரம்ப்பின் தலையீட்டால் போட்டித் தடை நீக்கம்? உலக கால்பந்தில் பெரும் சர்ச்சை!

3 hours ago
World
(4 views)
aivarree.com

அமெரிக்க அணியின் கால்பந்து வீரர் போலரின் பாலோகனுக்கு (Folarin Balogun) விதிக்கப்பட்ட ஒரு போட்டித் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் (FIFA) தாம் கோரிக்கை விடுத்ததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

போஸ்னியா அணிக்கு எதிரான போட்டியில் பாலோகன் சிவப்பு அட்டை பெற்றதால், பெல்ஜியம் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழக்கவிருந்தார்.

எனினும், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய பேச்சை அடுத்து, பாலோகனின் போட்டித் தடையை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த ஃபிஃபா தீர்மானித்தது.

இதனால் அவர் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

ஃபிஃபாவின் இந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ள அதேவேளை, இத்தீர்மானம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிஃபாவின் இந்த முடிவால் தாம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக பெல்ஜியம் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஃபிஃபா தனது எல்லையை மீறிச் செயற்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியமான யுவேஃபா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.