முக்கிய நிகழ்வை புறக்கணித்து வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்!

5 years ago
tamilnewsline.com

தேசிய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வணக்கஸ்தலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

கொள்ளுப்பிட்டி பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்தியாராம விகாரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.

தேசிய சுதந்திர தின நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் அந்த நிகழ்வில் இன்று பங்கேற்கவில்லை.

Reported by
Editorial Reporter