”பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்”

4 years ago
Sri Lanka
(42 views)
aivarree.com

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், ”இலங்கையில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் 42 ஆண்டுகளாக இருக்கின்றது.

விசேடமாக தமிழ் இளைஞர்களை ஒடுக்கி சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் மோசமான சட்டமாக இது காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

குறித்த சட்டத்தின் சீர்திருத்தமும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Reported by
Editorial Reporter