பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை

5 years ago
tamilnewsline.com

பேஸ்புக்கில் பிரபாகரனின் படத்தை பகிர்ந்தமைக்காக கைதான 4 பேர் 13 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கட்டனர்.

மட்டக்களப்பு செங்கலடி சித்தாண்டி ஏறாவூர் மற்றும் ஜயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகிய 4 பேருக்கும் இன்று பிணை கிடைத்தது.

இதற்கான இணக்கப்பாட்டை சட்டமா அதிபர் வழங்கிய நிலையில் மட்டக்களப்பு சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Reported by
Editorial Reporter