சிறார்கள் மத்தியில் ஒமிக்ரொன் பரவும் அபாயம் – வைத்தியர் எச்சரிக்கை

4 years ago
Sri Lanka
(137 views)
aivarree.com

இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் மத்தியில் ஒமிக்ரொன் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இதனால் கூடிய சீக்கிரம் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஒரு தடுப்பூசியை மட்டுமே செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் மத்தியில் ஒமிக்ரொன் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே சிறார்களை பொது இடங்களுக்கு அநாவசியமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வதுடன், சுகாதார பழக்கவழக்கங்களை முறையாக பின்பற்ற செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.