அம்பிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனோ

4 years ago
Sri Lanka
(110 views)
aivarree.com

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவில் சாட்சி வழங்கி இருந்த முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், நாட்டில் இனபாரபட்சம் இருப்பது உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டி இருந்தார்.

இது தொடர்பில் கண்டனம் தெரிவித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

வெளிவிவகார அமைச்சின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோகணேசன், இலங்கையில் பாரபட்சம் இருக்கின்றமை உண்மை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு வர்த்தமானியின் படி காலியில் 2 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு, அதே வர்த்தமானியில் உள்ளபடி நுவரெலியாவில் 5 பிரதேச செயலகங்களை உருவாக்காமை அதற்கு சிறந்த உதாரணம் என்றும் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மனோகணேசன் விடுத்துள்ள முழுமையான அறிக்கை

Reported by
Editorial Reporter