ஒமிக்ரொனால் இலங்கையில் அதிக மரணங்களா? பதில்கூற மறுப்பு

4 years ago
Sri Lanka
(42 views)
aivarree.com

இலங்கையில் ஒமிக்ரொன் திரிபு வேகமாகப் பரவுகின்ற நிலையில், அதிகப்படியான மரணங்களும் அதனாலேயே இடம்பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்தை கேட்ட போது, அதற்கான பதிலைக் கூறுவது சிரமம் என்றார். 


நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஒமைக்ரொன் திரிபால் பிடிக்கப்பட்டவர்கள்.


எவ்வாறாயினும் மரணிப்பவர்கள் ஒமிக்ரொன் தொற்றால் பீடிக்கப்பட்டவர்களா? என்பதைக் கூறுவது சிரமமானது.


அதற்குப் பதில் கூற வேண்டும் என்றால், மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் அனைத்துக்கும் விசேட ஆய்வு மேற்கொள்ள நேரும், என்றார்.