கிரிக்கெட் / தொடரை கைப்பற்றியது இந்தியா

4 years ago
SPORTS
(37 views)
aivarree.com

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2:0 என்ற ரீதியில் கைப்பற்றியது. 

புதன்கிழமை நடைபெற்ற 2ம் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 64 ஓட்டங்களைப் பெற்றார்.

238 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள், 46 ஓவர்களில் 193 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. 

இந்தியா சார்பில் ப்ரசித் கிருஷ்ணா 41 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.