மகள் மரணம் / ஊரார் பேச்சால் தந்தையும் மரணம் / மட்டக்களப்பில் சம்பவம்

4 years ago
Sri Lanka
(58 views)
aivarree.com

17 வயது சிறுமி ஒருவர் விசமருந்தி மரணித்ததை அடுத்து அவரது தந்தை மறுநாள் காலை தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார். 

மட்டக்களப்பு – களுவன்கேணி முதலாம் பிரிவு அக்கரை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா மற்றும் அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகியோரே இவ்வாறு மரணித்தனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது காதலுக்குத் தந்தை எதிர்ப்பை தெரிவித்தமைக்காக குறித்த சிறுமி இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் இந்த முடிவுக்குத் தந்தையே காரணம் என்று பிரதேச மக்கள் தூற்ற ஆரம்பித்ததை அடுத்து அவரும் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.