உக்ரைன் யுத்தத்திற்கு மேற்குலக நாடுகள் வழங்கும் பதிலை ரஷ்யா குறைத்து மதிப்பிட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தமது அரச உரையை நிகழ்த்திய ஜோ பைடன், எதேச்சாதிகாரிகள் தக்க விலையை கொடுக்க நேரும் என்றும் எச்சரித்துள்ளார்.
அவரது உரையின் முக்கிய சில அம்சங்கள்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவத் துருப்பினரை அனுப்பப் போவதில்லை.
- ஆயுதங்களுக்காக 350 மில்லியன் டொலர்களும், மனிதாபிமான தேவைகளுக்காக 54 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ரஷ்யாவின் தெரிவு செய்யப்பட்ட வங்கிகள் உலக ஸ்விஃப்ட் வங்கி கட்டமைப்பில் இருந்து நீக்கம்.
- ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை முடக்குவதும் சுவீகரிப்பதும்.
- ரஷ்ய உரித்துடைய மற்றும் ரஷ்யாவினால் இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிப்பு.
