உக்ரைன் – ரஷ்யா விவகாரம் – அறிந்து கொள்ள 10 முக்கிய விடயங்கள்

4 years ago
World
(85 views)
aivarree.com

உக்ரைன் எல்லையில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினர் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.


அறிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்


  1. ரஷ்யா, உக்ரைன் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி இருப்பதாகப் போலியான படங்கள் வெளியாகியுள்ளன.

  2. ரஷ்யா தாக்கினாலும் எதிர்த்தாக்குதல் குறித்த திட்டங்கள் எவையும் இல்லை என உக்ரைன் அறிவித்துள்ளது.

  3. ரஷ்யாவின் சில துருப்புக்கள் திட்டமிட்ட பயிற்சிகளுக்குப் பிறகு தங்கள் தளங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறது – ஆனால் உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் அதற்கான எந்த ஆதாரத்தையும் காணக்கிடைக்கவில்லை என்று கூறுகின்றன.

  4. ரஷ்யா சனிக்கிழமை உந்துகணை (Ballistic) மற்றும் கப்பல் எறிகணைப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

  5. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது உக்ரைனைச் சுற்றி 190,000 துருப்புகளைக் கொண்டுள்ளது.

  6. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப் பெரிய இராணுவ அணிதிரட்டல்’ இது என்று கருதப்படுகிறது.

  7. பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் வெள்ளி அன்று முனிச்சில் கூடுகிறார்கள் – ஆனால் ரஷ்யா 1999க்கு பிறகு முதன் முறையாக இதில் பங்கேற்கவில்லை.

  8. கிழக்கு உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

  9. உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

  10. உக்ரைன் மீதான படையெடுப்பு திட்டத்தை மொஸ்கோ தொடர்ந்து மறுத்து வருகிறது.