பதுக்கப்பட்டிருந்த 4000 கேஸ் சிலிண்டர்கள் மீட்பு

4 years ago
Sri Lanka
(32 views)
aivarree.com

அங்குனுகொலபெலெஸ்ஸ பகுதியில் எரிவாயு களஞ்சிய சாலை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கொள்கலன்கள் (கேஸ் சிலிண்டர்கள்) கண்டுபிடிக்கப்பட்டன.

2 கொள்கலன் பாரவூர்கள் மற்றும் இரண்டு சாதாரண பாரவூர்திகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்து மீட்கப்பட்ட 12.5 கிலோ கிராம் மற்றும் 3.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்கள் (கேஸ் சிலிண்டர்கள்) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.

இதன்படி அங்கிருந்த சில கொள்கலன்கள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் ஏனையவை ரன்ன பிரதேசத்தில் உள்ள எரிவாயு விநியோக நிலையம் ஒன்றுக்கு வழங்கப்பட்டன.