வீழும் தங்க விலை | உள்ளூர் சந்தையில் ஏற்றம்

4 years ago
Sri Lanka
(377 views)
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்க விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

தற்போது ஒரு கிலோ தங்கம் சர்வதேச சந்தையில் 1000 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ தங்கம் 61,753.95 டொலர்களாக (இலங்கை நேரம் 7 மணிக்கு) விற்பனையாகிறது.

எனினும் உள்நாட்டு சந்தையில் தங்க விலை தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இலங்கையில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 155,000 ரூபாய் அளவில் விற்பனையாவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.