இனி வாளிகள் கொள்கலன்களின் டீசல் பிடிக்க முடியாதா?

5 years ago
tamilnewsline.com

இனிமேல் வாளிகள், போத்தல்கள், கேன்கள் போன்ற கொள்கலன்களில் டீசலை வழங்க வேண்டாம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, சாரதிகள் கேன்கள், வாளிகள் போன்ற கொள்கலன்களில் எரிபொருட்களை பெற்று வருகின்றனர்.

இதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவ்வாறான செயற்பாட்டை அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக அய்வரி செய்தி குழு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பலரையும் தொடர்பு கொண்டு வினவியது.

இதன்போது, சாதாரண வாளிகள், கேன்கள், போத்தல்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய தடை இல்லை என்றும், மிகப்பெரிய பெரல் வாலிகள் போன்றவற்றில் கொள்வனவு செய்யவே தடை விதித்திருப்பதாகவும் அதிகாரிகள் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தனர்.