உக்ரைன் – ரஷ்யா / 10ம் நாள் போர் / 12 அப்டேட்ஸ் இதோ

4 years ago
World
(93 views)
aivarree.com

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை 10வது நாளாகத் தொடர்கிறது.

தற்போது மரியூபோல் மற்றும் வொல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள நிலைமைகள் தொடர்பான 12 செய்தித்துளிகள் கீழே.


1) உக்ரைனின் மரியூபோல் நகரில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரஷ்யா சில இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. – இதனால் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன.


2) மரியூபோல் நகரை இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்யப் படையினர் கைப்பற்றிடும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது – அங்குள்ள மக்கள் சாபொரிஸ்ஸியா நகரின் தென்பகுதிக்கு அழைத்துச் செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது. 


3) உக்ரைன் யுத்தம் தொடர்பாக, இத்தாலியின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் கலந்துரையாடவுள்ளார். இந்த பிரச்சினைக்கான தீர்வுக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


4) ரஷ்யா மிகப்பெரிய நாடு என்றும் அதனைத் தனிமைப்படுத்த முடியாது எனவும், மேற்குலக நாடுகள் கொள்ளையர்கள் போலச் செயற்படுவதாகவும் க்ரெமலின் பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

5


5) அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் லித்துவேனியா எல்லையில் தங்களது படையினரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர் – தற்போது அங்கு 3000 பேர் நிலைகொண்டுள்ள நிலையில், மார்ச் மாத இறுதியில் 4000 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


6) உக்ரைனில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி ஒன்றை அமைப்பது குறித்து ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் பெலாரஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 


எமது வட்சப் குழுவில் இணைந்து கொண்டு உடனடி செய்திகளைப் பெற இங்கு களிக் செய்யுங்கள்


7) ரஷ்யாவின் ஏற்றுமதியாளர்கள் தங்களது வருமானத்தின் 80 சதவீதத்தை உள்நாட்டுச் சந்தையில் மாற்ற வேண்டும் என்று கடந்த 28ம் திகதி விடுக்கப்பட்ட உத்தரவை அந்நாட்டு மத்திய வங்கி மீளப்பெற்றுள்ளது. 


8) பல்டிக் கடல் நாடுகளின் பேரவையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மற்றும் பெலாரஸை நீக்கியுள்ளது. 


9) ரஷ்யா உடனான யுத்தத்தில் பங்கேற்பதற்காக 66,200க்கும் அதிகமான யுக்ரைனியர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி இருப்பதாக, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

10


10) ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது – ஜப்பான், டோக்கியோ நகரிலும் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினார்கள். 


11) போருக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் மத்தியிலும், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் உக்ரைன் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


12) ரஷ்யச் செய்திகளைத் தணிக்கை செய்யுமாறு ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் சில அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டதாகவும் அதனை மறுத்ததாகவும், அந்த நிறுவனத்தின் தலைவரும் உலக முதலாவது செல்வந்தருமான எலொன் மஸ்க் அறிவித்துள்ளார். (இந்த செய்தியை விரிவாக வாசிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்