10,000 டொலருக்கு மேல் கொண்டு செல்ல தடை / ரஷ்யாவில் புது உத்தரவு

5 years ago
tamilnewsline.com

உக்ரைன் மீதான தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதனால் ரஷ்யாவில் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வெளியேறுகின்ற யாரும் 10000 டொலருக்கு மேல் கொண்டு செல்ல முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதிமூலத்தை ரஷ்யாவிற்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.