அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 MPகள்

5 years ago
tamilnewsline.com

ஆளும் அரசாங்கத்தில் இருந்து 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியைச் சேர்ந்த 2 பேர், உதய கம்மன்பில, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க ஆகியோருடன், ஏ.எல்.எம். அத்தாவுல்லாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இவ்வாறு 10 கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், 11ஆவது கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களையும் தங்களுடன் இணைத்து ஒரு அணியாக செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக எதிர்வரும் நாட்களில் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக இந்த 11 கட்சிகள் இணைந்து கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.