நாட்டில் பொருளாதார மீளுகை காணப்படுகின்ற போதிலும் நாடு முகம் கொடுக்கும் சவால்கள் குவிந்துள்ளது என IMF தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பாக “ஆர்ட்டிகல் 4” என்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு கடந்த மாதம் 25ம் திகதியுடன் நிறைவடைந்தது.
அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு முன்வைத்துள்ள முக்கியமான பரிந்துரைகளும் கருத்துகளும் வருமாறு.
- நாட்டில் இரட்டை இலக்கத்தில் நிலவுகின்ற பணவீக்க நிலைமை எதிர்வரும் காலாண்டிலும் தொடரும்.
- நினைத்ததை விட வேகமாக சுற்றுலாத்துறை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
- தடுப்பூசி வழங்கல் திட்டம் பாராட்டுக்குரியது.
- பேரண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கும், கடன் நிலைபேறுக்கும் நம்பகமானும் உறுதியானதுமான மூலோபாயத்தை அவசரமாக அமுலாக்கல்.
- இருக்கமான நாணயக் கொள்கையை பின்பற்றுதல்.
- வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தை அதிகரிக்க வலைந்து கொடுக்கக்கூடிய நாணய மாற்றுவிகிதத்தை கடைபிடித்தல்.
- பெண் தொழிலாளர் பங்களிப்பை அதிகப்படுத்தல், இளைஞர் மத்தியில் வேலையின்மையை குறைத்தல்.
- கடன் செலுத்துகைக்கான தேவை பூர்த்தியாகாவிட்டால், இறக்குமதியிலும், தனியார் கடன் வளர்ச்சியிலும் பெரும் சிக்கல் ஏற்படக்கூடும்.
- நிதி பற்றாக்குறைகளுக்கான மத்திய வங்கியின் நேரடிய நிதியிடல் தொடர்ந்தால், நாணய நிலையற்றத்தன்மை உருவாகலாம்.
- கொழும்பு துறைமுக நகர் மீதான சீரான முகாமைத்துவத்துக்கும், நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் அறிவுறுத்தல்.
முழுமையான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
