“நீர்” வசிக்கும் இடத்திலும் நீர் வெட்டா?

4 years ago
Sri Lanka
(66 views)
aivarree.com

கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை (05) இரவு 8 மணிமுதல் 14 மணிநேரம் நீர் தடை அமுலாகவுள்ளது.

கொழும்பு 7,8,10,12,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் துண்டிக்கப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய சனிக்கிழமை (05) இரவு 8 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் 10 மணிவரையில் இந்த நீர் விநியோகம் தடை அமுலாகும்.

அத்துடன் கொழும்பு 2,3 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறும்.