5ம் ஆண்டு புலமை பரிசில் | பெறுபேறு வெளியிடுவதில் சிக்கல்

4 years ago
Sri Lanka
(921 views)
aivarree.com

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.


முன்னதாக எதிர்வரும் திங்கட்கிழமையே இந்த பெறுபேறுகளை வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்திருந்தது.


ஆனால் அதனைச் சனிக்கிழமை இரவே வெளியிட வேண்டுமெனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


‘பரீட்சை பெறுபேறுகளை இன்றே (சனிக்கிழமை) வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்’ என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.


எவ்வாறாயினும் இன்று தயார்ப் படுத்தப்படாததன் காரணமாகப் பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.