ரஷ்யா – உக்ரைன் மோதல் – பிந்திய 11 தகவல்கள் (புள்ளிகள்)

4 years ago
World
(141 views)
aivarree.com

உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் முழுமையான படையெடுப்பை ரஷ்யா முன்னெடுத்துள்ள நிலையில், அண்மைய 11 தகவல்கள் உள்ளடங்கிய தொகுப்பு.


  1. உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கை தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைநிறுத்தியது – வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.
  2.  
    ரஷ்ய அதிபரின் செயலை பாப்பரசர் ஃப்ரான்ஸிஸ் கண்டித்துள்ளார் – வெட்கக்கேடான முதலாளித்துவம் என விமர்சித்துள்ளார். 

  3. பேஸ்புக் ஐ ரஷ்யா இடைநிறுத்தியுள்ளது – போலி செய்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சுமத்தல். 

  4. உக்ரைன் எல்லையில் 150க்கும் அதிகமான ரஷ்ய உலங்குவானூர்திகள் நிலைகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

  5. இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்யப் படையினர் உக்ரைன் தலைநகர் கியவை சூறையாடவுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி

  6. கியவ் அருகில் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர் – கியவ் நகரில் 5 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  7. உக்ரைன் ஜனாதிபதியைக் கைவிட்டு தம்முடன் இணையுமாறு ரஷ்ய ஜனாதிபதி உக்ரைன் படையினரை அறிவுறுத்தியுள்ளார். 

  8. ரஷ்யப் படையினர் நெருங்குகின்ற நிலையில், உக்ரைன் பொதுமக்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

  9. விளாடிமிர் புட்டின் உள்ளிட்டவர்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா என்பன பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளன.

  10. கிழக்கு ஐரோப்பாவுக்கு நேட்டோ தமது படைகளை அனுப்பியுள்ளது – கூட்டிணைவை உறுதிப்படுத்தவும், ரஷ்யாவை கசப்புக்குள்ளாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

  11. ரஷ்யா, சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரிலிருந்து வெளியேற்றம் – 2022ம் ஆண்டு யூரோவின் பாடலிலிருந்தும் நீக்கம் – க்ராண்ட் பிரிக் கார்பந்தயத்தை நடத்தத் தடை.

இவ்வாறான தகவல்கள் தொகுப்பாக பெற்றுக் கொள்ள எம்முடன் இணைந்திருங்கள். கீழுள்ள LINK ஐ க்ளிக் செய்து எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.