CEYPETCO வும் எரிபொருள் விலையை கூட்ட வேண்டிய கட்டாயத்தில்

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

எரிபொருள் விலையை அதிகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CEYPETCO) உள்ளது.

லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) தமது எரிபொருள் விலையை சனிக்கிழமை (26) நள்ளிரவுடன் அதிகரித்துள்ளது.

டீசல் விலையை 15 ரூபாவாலும், பெற்றோல் விலையை 20 ரூபாவாலும் அதிகரித்து, அதன் டீசலுக்கான புதிய விலையாக 139 ரூபாவும், 92 ஒக்டென் பெற்றோலுக்கான புதிய விலையாக 204 ரூபாவும் நிர்ணயித்துள்ளது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CEYPETCO) ஏற்கனவே நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் நிலையில், LIOC இன் இந்த விலை அதிகரிப்பு CEYPETCO வின் எரிபொருள் விற்பனையை அதிகப்படுத்தும்.

இதனால் அதன் நட்டம் மேலோங்குகின்ற நிலையில், LIOC இன் விலைக்கேற்கவேனும் தமது விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.