மோடி – ஜீ.எல் சந்திப்பு உறுதியில்லை

5 years ago
tamilnewsline.com

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் திட்டத்துடன் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்தியா சென்றுள்ளார்.

ஆனால், அவரை சந்திப்பதற்கான காலத்தை மோடி இன்னும் ஒதுக்கவில்லை என்று இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் திடீர் மரணத்தை அடுத்து மோடி பல்வேறு நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளார்.

இந்தநிலையில் அவர் ஜீ.எல் பீரிஸை சந்திப்பார் என உறுதியாக கூறமுடியாதிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக் கொள்வதற்காக ஜீ.எல்.பீரிஸ் அங்கு சென்றுள்ளார்.

Reported by
Editorial Reporter