மோடியை சந்திக்கும் முயற்சியில் ஜீ.எல்.பீரிஷ்

5 years ago
tamilnewsline.com

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கடந்த தினம் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்தார்.

8ம் திகதி வரையில் அங்கு தங்கி இருக்கும் அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரை சந்திக்கிறார்.

அதேநேரம் அவர் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்னும் இந்திய தரப்பிடம் இருந்து பதில்தரப்படவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.