மாஸ்க் இல்லாமல் டெல்லியில் வாகனம் ஓட்டலாம் / புதிய சட்டம்

4 years ago
World
(28 views)
aivarree.com

இந்திய தலைநகர் டெல்லியில் இனி வாகனங்களை தனித்து செலுத்தும் போது மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றை மையப்படுத்தி இந்த தீர்மானத்தை டெல்லி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கார் ஒன்றில் அமர்ந்து தேனீர் அருந்திய ஒருவருக்கு டெல்லி காவல்துறையினர் அபராதம் விதித்திருந்தனர்.

தனது சொந்த வாகனத்தில் அமர்ந்து தேநீர் பருகிய ஒருவருக்கு அபராதம் விதிப்பது அபத்தமானது என நீதிமன்றம் அறிவித்தது.

இதனை அடிப்படையாக வைத்து இனி டெல்லியில் தனித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மாஸ்க் அணிந்து செல்லத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter