ஓமிக்ரோன் என்பது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒரு கொரோனா திரிபாகும்.
இது மிக வேகமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.
இந்த ஓமிக்ரோன் திரிபின் உபதிரிபான BA-2 50க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்த உபத்திரிபானது ஒமிக்ரோனைவிட மிக மிக வேகமாக பரவக்கூடியது என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இதனால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படாது எனவும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகவும் பாதுகாப்பானதாக அமையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
