மனித உரிமைகள் பேரவைக்குக் கடிதம் அனுப்பவுள்ள தமிழ் கட்சிகள்

4 years ago
Sri Lanka
(41 views)
aivarree.com

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வை இலக்காகக் கொண்டு, தமிழ் கட்சிகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளன.


இதுதொடர்பாக ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்றன கட்சிகள் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடவுள்ளன.


தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறு இதுதொடர்பாக கலந்துரையாடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்க வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு இந்த கட்சிகளால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 


தற்போது மனித உரிமைகள் பேரவைக்கான கடிதத்தை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளன.