சமுதித்தவின் இல்லத்தின் மீது தாக்குதல்

4 years ago
Sri Lanka
(152 views)
aivarree.com

சுயாதீன ஊடகவியலாளரும் ஹிரு தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது திங்கள் அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் உள்ள அவரது இல்லத்துக்கு முகக்கவசங்களுடன் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்தாரிகள் வீட்டின் பாதுகாவலரை துப்பாக்கிமுனையில் தடுத்து வைத்திருந்ததாக ஹிரு தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.