பாகிஸ்தானுக்குள் ‘தவறுதலாக’ ஏவுகணை ஏவிய இந்தியா

4 years ago
World
(126 views)
aivarree.com

பாகிஸ்தானுக்குள் இந்தியா தவறுதலாக ஏவுகணை ஒன்றைச் செலுத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு ஒன்றினால் கடந்த 9ம் திகதி இந்த ஏவுகணை பாகிஸ்தான் திசை நோக்கிச் செலுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் மட்ட நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் இதில் பாதிப்பு இல்லை என்பது ஆறுதலானது என்றாலும், தவறுக்கு வருந்துவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதுவர் அழைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்குள் 40,000 அடி உயரத்தில் 100 கிலோமீற்றர் வரையில் பயணித்த தரை தொட்ட இந்த ஏவுகணையில் வெடிபொருட்கள் இருக்கவில்லை என்பதால், அசம்பாவிதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.