பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை| விமல் ஆதரவு

4 years ago
Sri Lanka
(59 views)
aivarree.com

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் அதற்கு முழுமையாக ஆதரவளிக்கப்படும் என்று விமல் வீரசன்ச MP தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைகாட்சியின் சலகுண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அவர் தெரிவித்த முக்கியமான விடயங்கள் கீழே.

  • நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முழுமையாக பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளே காரணம்.
  • மகிந்த ராஜபக்ஷ தீர்மானிக்கும் அதிகாரம் இல்லாதவராக உள்ளார்.
  • பசில் எடுக்கும் தீர்மானங்களே அமைச்சரவையில் இறுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
  • பசிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை வெற்றிப் பெற முடியுமாக இருந்தால் மட்டுமே கொண்டு வருவோம்.
  • எந்த கட்சி பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தாலும், அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.