கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரைக்கும் ஒரு கோலை (Goal) கூட பெறாமல் இருந்தார்.
செவ்வாய்க்கிழமை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மென்ச்செஸ்ட்டர் யுனைடட் அணி பிரீமியர் லீக் தொடரில் ப்ரைட்டன் அணிக்கு எதிராக விளையாடியது.
இந்த போட்டியில் இரண்டாவது பாதியில் அவர் கோலை ஒன்றை போட்டு, இந்த வருடத்தின் முதலாவது கோலை பெற்றுக்கொண்டார்.
இந்த போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரீமியர் லீக் தொடரில் முதல் நான்கு அணிகளுக்குள் மென்செஸ்டர் யுனைட்டெட் உள்வாங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகளை whatsappஇல் உடனுக்குடன் பெற எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.
