கிளன் மேக்ஸ்வெல் IPL போட்டிகளில் விளையாட முடியாத நிலை?

4 years ago
SPORTS
(68 views)
aivarree.com

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக தவிர்க்க உள்ளார்.

அத்துடன் அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் பங்குபற்ற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த “தவிர்க்கமுடியாத முடிவை எடுத்துள்ளதாக” ஃபொக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு மெக்ஸ்வெல் கூறியுள்ளார்.

அவர் ஐபிஎல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுகிறார்.

IPL மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் தொடர் 29ஆம் திகதி மார்ச் மாதம் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்யிகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள் -> Sports WhatsApp >>> https://chat.whatsapp.com/JjPCpjHBxujC2i9YksGM94