கொவிட் நோய் ஏற்பட்டதன் பின்னர் பாலியல் இயலாமை நிலை ஏற்படுவதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், அவ்வாறான விடயம் எதுவும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சின் கொவிட் இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3ஆம் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் பாலியல் இயலாமை, ஆண்மை மற்றும் கருத்தரித்தல் குறைபாடு ஏற்படுவதாக வெளியிடப்படும் தகவலும் உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
