250 ரூபாவை கடந்த பெற்றோல் விலை | காரணம் என்ன?

4 years ago
Sri Lanka
(158 views)
aivarree.com

இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலையை ஒரே தடவையில் பெருமளவில் அதிகரித்தது.

அனைத்து வகையான டீசல்களின் விலையையும் அந்த நிறுவனம் 75 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், டீசலின் புதிய விலை 214 ரூபாவாகும்.

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.

மத்திய வங்கி இலங்கை ரூபாவின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்து மிதப்பில் விட்டதன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்று 260 ரூபாவாக அதிகரித்திருந்தது.

அதனால் பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டதன் காரணமாகவே தமது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என்று இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.