உக்ரைன் – ரஷ்ய விவகாரம் /புதிய 10 புள்ளிகள்

4 years ago
World
(55 views)
aivarree.com

உக்ரைன்ரஷ்ய விவகாரம் தொடர்பாக இதுவரையான நிலவரங்களின் சுருக்கமான 10 புள்ளிகள்.

  1. கிழக்கு உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பும் மொஸ்கோவின் திட்டம், ‘சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
  2. மொஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளால் நிர்வகிக்கப்படும் கிழக்கு உக்ரைனின் இரண்டு பகுதிகளுக்கு இதுவரை ரஷ்ய துருப்புக்கள்; அனுப்பப்படவில்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
  3. மொஸ்கோவில் உள்ள பாராளுமன்ற மேலவையானது, வெளிநாடுகளுக்கு ராணுவத்தை அனுப்ப, அதிபர் புட்டினுக்கு அதிகாரம் அளித்துள்ளது
  4. ரஷ்யாவால் தனி குடியரசுகளாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் எல்லைகளை அவற்றின் அரசியலமைப்புகளில் கோடிட்டுக் காட்டியுள்ளதை அங்கீகரிப்பதாக விளாடிமிர் புடின் கூறுகிறார் – இதில் உக்ரேனியப் பகுதியும் அடங்கும்.
  5. ரஷ்யா நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
  6. ஐரோப்பிய ஒன்றியம், தனி குடியரசுகளை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்தும், வங்கிகளுக்கு எதிராகவும் பொருளாதார தடை விதிக்கவுள்ளது.
  7. ரஷ்யாவிலிருந்து ஒரு பெரிய எரிவாயு குழாய் அமைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
  8. உக்ரைனில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைதிகாக்கும் படையை அனுப்பும் ரஷ்யாவின் திட்டம் சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
  9. நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் ரஷ்யாவிலுள்ள தங்களின் தூதுவர்களை நாட்டுக்கு அழைத்துள்ளன.
  10. உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டை மேற்குலக நாடுகள் கோருகின்றன. ஆனால் இந்தியா செய்வதறியாதுள்ளது.