சந்திரிக்கா கட்சியில் இணையும் ஜீவன்

4 years ago
Sri Lanka
(39 views)
aivarree.com

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க குமாரதுங்க, அடுத்துவரும் தேர்தல்களை இலக்கு வைத்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இதில் இணைவதற்காக முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து, அதில் இருந்து விலகுவதாக ஜீவன் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

சந்திக்கா அமைக்கும் புதிய கூட்டணியில் இணையும் நோக்கிலேயே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்காவின் கணவர் விஜயகுமார துங்கவின் சகோதரரே ஜீவன் குமாரதுங்க என்பது குறிப்பிடத்தக்கது.